கொள்கலன் வாகன உரிமையாளர்களின் போராட்டத்தை நிறுத்துமாறு இடைக்காலத் தடையுத்தரவு

கொள்கலன் வாகன உரிமையாளர்களின் போராட்டத்தை நிறுத்துமாறு இடைக்காலத் தடையுத்தரவு

கொள்கலன் வாகன உரிமையாளர்களின் போராட்டத்தை நிறுத்துமாறு இடைக்காலத் தடையுத்தரவு

எழுத்தாளர் Staff Writer

17 Mar, 2015 | 2:37 pm

கொழும்பு இங்குறுகடை சந்திக்கு அருகில் துறைமுக வாயிலை இடைமறித்து கொள்கலன் வாகன உரிமையாளர்கள் ஆரம்பித்துள்ள எதிர்ப்பு நடவடிக்கையை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில், பொலிஸார் விடயங்களைத் தெளிவுபடுத்தியதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த எதிர்ப்பினால் இங்குறுகடை சந்தியை அண்மித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

கொள்கலன் வாகனங்களுக்கு புதிய அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொள்கலன் வாகன உரிமையாளர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்