கெப்பிட்டிபொலயில் அறையுடன் கூடிய சுரங்கம் கண்டுபிடிப்பு

கெப்பிட்டிபொலயில் அறையுடன் கூடிய சுரங்கம் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2015 | 10:08 pm

வெலிமடை – எரபெத்த பகுதியில் சுரங்கமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா – ஹப்புத்தளை பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா – ஹப்புத்தளை பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகளின் போது, பெக்கோ ஒன்றின் ஊடாக பாரிய கல்லொன்றினை நகர்த்தும் போது இந்த சுரங்கம் தென்பட்டுள்ளது.

பிரதான வீதியில் இருந்து 1 மீற்றர் தூரத்திலுள்ள கெப்பிட்டிபொல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சுரங்கத்தின் வாயில் சுமார் 3 அடி உயரத்தைக் கொண்டமைந்துள்ளது.

குறித்த சுரங்கத்தினுள் பிரவேசித்த போது அங்கு அறையொன்று காணப்பட்டதாகவும் மேலும் இரண்டு சிறிய வாயில்கள் காணப்பட்டதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்