கிணற்றில் யுவதியின் சடலம்: வவுனியாவில் சம்பவம்

கிணற்றில் யுவதியின் சடலம்: வவுனியாவில் சம்பவம்

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2015 | 10:32 pm

கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) முதல் காணாமற்போயிருந்த வவுனியா – பட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த யுவதி இன்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

18 வயதான குணரட்ணம் லக்சிகா என்ற யுவதியைத் தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று காலை லக்சிகாவின் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் விசாணைகளை மேற்கொண்டார்.

பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்