கட்சிப்பொறுப்பை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – ஜனாதிபதி

கட்சிப்பொறுப்பை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2015 | 8:26 pm

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொறுப்பு தமக்கு வழங்கப்பட்டுள்ளதாயின், அதனை நடத்திச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (16) நடைபெற்ற கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடனான விசேட மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் தேர்தலுக்கான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு அதிகாரிகளை நியமித்தல் மற்றும் தேர்தல் குழுவை நியமித்தல் என்பன இதன்போது இடம்பெற்றது.

மக்கள் பிரதிநிதிகள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் தேர்தல் முறையில் ஏற்படுகின்ற மாற்றம் தொடர்பிலும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு இதன்போது முன்வைக்கப்பட்டது.

இதன்போது, ஜனாதிபதி தெரிவித்ததாவது;

[quote]2005ஆம் ஆண்டு ஜனாதிபதிப் பதவியிலிருந்து சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விலகி, அந்த பொறுப்புக்களை மஹிந்த ராஜபக்ஸவிடம் ஒப்படைத்தமை உங்களுக்கு நினைவில் இருக்கும். சந்திரிக்கா குமாரதுங்கவிடமிருந்து மஹிந்த ராஜபக்ஸ கட்சியை பொறுப்பேற்றுக்கொண்டார். மஹிந்த ராஜபக்ஸவிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்சியின் எந்த விடயங்களையும் பார்வையிடவில்லை.[/quote]

என்றார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

[quote]மஹிந்த ராஜபக்ஸ எனக்கு இந்தக் கட்சியின் பொறுப்பை வழங்கியிருந்தால், கட்சியின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை எனக்கு வழங்க வேண்டும். கட்சியின் தலைமைத்துவம் எனக்குக் கிடைத்ததன் பின்னர், கட்சி தொடர்பில் கதைப்பதற்கான சுதந்திரத்தை நான் பெற்றுள்ளேனா என்பதனை மனசாட்சிக்கு விரோதமின்றிக் கூறுங்கள். இந்த நாட்டில் மீண்டும் யுத்தமொன்று இடம்பெறாத வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள குறைந்தது இரண்டு வருடங்களேனும் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்படுவோம்.[/quote]

என்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்