ஒரே நாளில் 12 பேரைத் தூக்கிலிட்டது பாகிஸ்தான்

ஒரே நாளில் 12 பேரைத் தூக்கிலிட்டது பாகிஸ்தான்

ஒரே நாளில் 12 பேரைத் தூக்கிலிட்டது பாகிஸ்தான்

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2015 | 4:53 pm

பாகிஸ்தானின் பல்வேறு சிறைகளில் இருந்த 12 மரண தண்டனைக் கைதிகள் இன்று (17) தூக்கிலிடப்பட்டனர்.

ஆறு ஆண்டுகளாக அந்நாடு சுயமாக விதித்திருந்த மரண தண்டனை நிறைவேற்றங்களுக்கான தடை விலக்கிக்கொள்ளப்பட்டதிலிருந்து, ஒரு நாளில் இவ்வளவு அதிகமானோர் தூக்கிலிடப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

ஜங், கராச்சி, லாகூர், ராவல்பிண்டி, முல்தான், மியான்வாலி, ஃபைஸலாபாத், குரன்வாலா ஆகிய சிறைகளில் குறித்த 12 பேரும் தூக்கிலிடப்பட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்