உலகின் தூய்மையான 100 கேரட் வைரம் ஏலத்திற்கு வருகிறது

உலகின் தூய்மையான 100 கேரட் வைரம் ஏலத்திற்கு வருகிறது

உலகின் தூய்மையான 100 கேரட் வைரம் ஏலத்திற்கு வருகிறது

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2015 | 4:05 pm

உலகின் தூய்மையான 100 கேரட் வைரம் ஒன்று துபாயில் இடம்பெறும் கண்காட்சி ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஏலம் விடப்படவுள்ள இந்த வைரம், 25 மில்லியன் டொலர்கள் வரையில் விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தென் ஆபிரிக்காவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கண்டறியப்பட்ட இந்த வைரம் ‘மனம்கவரும் நகைகள்’ என்ற பிரிவின் கீழ் நியூயார்க்கில் ஏலம் விடப்பட உள்ளது.

ஏல நிறுவனத்தின் கூற்றின்படி இவ்வைரத்தின் மதிப்பு பல மில்லியன் கோடியைத் தாண்டுமாம்.
இதுகுறித்து அந்த ஏல நிறுவனம், ‘அருமையான வடிவமைப்பு கொண்ட இந்த வைரம் சரியாக 100.20 கேரட் ஆகும். சரியான வண்ண அமைப்புடன் கொஞ்சம் கூட மாசு மருவில்லாத வைரம் இது. இதுவரை ஏலம் விடப்பட்ட வைரங்களை விட அருமையான ஒன்று’ என்று தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்