அரசியல் நகர்வுகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் உணரவேண்டியது அவசியம் – ஜனாதிபதி

அரசியல் நகர்வுகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் உணரவேண்டியது அவசியம் – ஜனாதிபதி

அரசியல் நகர்வுகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் உணரவேண்டியது அவசியம் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

17 Mar, 2015 | 2:04 pm

உலகத்திற்கே முன்னுதாரணமாக அமைந்த இலங்கையின் அரசியல் நகர்வுகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் உணரவேண்டியது அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களின் விசேட செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

எதிர்கால தேர்தலுக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கும் பொறுப்பு இந்த செயலமர்வின்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் தேர்தலுக்கான குழுக்களும் நியமிக்கப்பட்டன.

தேர்தல் குழுக்கள் நியமனம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க விதிகள் குறித்தும் இந்த செயலமர்வின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு திருத்தம் மற்றும் தேர்தல் முறைமையை மாற்றுவது குறித்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்