இந்தியப் பிரதமருக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்க இடமளிக்கவில்லை – சி.வி. விக்கினேஸ்வரன்

இந்தியப் பிரதமருக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்க இடமளிக்கவில்லை – சி.வி. விக்கினேஸ்வரன்

இந்தியப் பிரதமருக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்க இடமளிக்கவில்லை – சி.வி. விக்கினேஸ்வரன்

எழுத்தாளர் Bella Dalima

17 Mar, 2015 | 8:52 pm

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணம் வந்திருந்தவேளையில் அவருக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கக்கூட இடமளிக்கப்படவில்லையென வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபையின் 26 ஆவது கூட்டத்தொடரில் எதிர்கட்சித் தலைவரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வட மாகாண சபையின் 26 ஆவது கூட்டத் தொடர், சபைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று நடைபெற்றது.

சுகாதார அமைச்சுக்கான நியதிச் சட்டத்தின் இரண்டாம், மூன்றாம் வாசிப்புகளைத் தொடர்ந்து திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

நியதிச் சட்டம் மீதான மூன்றாம் வாசிப்பின்போது சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசா நியதிச் சட்டத்தில் மாற்றப்பட வேண்டிய விடயங்களை எடுத்துக்காட்டியுள்ளார்.

இதன்போது, வைத்தியசாலைகளுக்கான அபிவிருத்திக் குழுக்களை நியமிப்பது தொடர்பில் முதலமைச்சர், சபைத் தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரிடையே வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

கடும் வாக்குவாதங்களின் பின்னர் திருத்தங்களுடன் சுகாதார அமைச்சுக்கான நியதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, வட மாகாண சபையின் உறுப்பினர்களின் விடுமுறை விவகாரம் தொடர்பில் சபைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் இன்று உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

வெளிநாடு செல்லும் வட மாகாண சபை உறுப்பினர்கள், மாகாண ஆளுநரின் முன் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என இதன்போது சபைத் தலைவர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து மாகாண ஆளுநரின் செயலாளரால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தை, சபைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், உறுப்பினர்களுக்கு வாசித்துக் காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்