ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவுபட்டுள்ளது – தலத்தா அத்துகோரல

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவுபட்டுள்ளது – தலத்தா அத்துகோரல

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவுபட்டுள்ளது – தலத்தா அத்துகோரல

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2015 | 11:33 am

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவுபட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பாரிய அரசியல் கட்சிகள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரின் தலையீடு காரணமாக பிளவுபட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன் வினை தன்னைச் சுடும் என்பதை உணர்த்துவதாகவே இந்த நிலைமை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவுபட்டுள்ள நிலையில் பலர் அந்தக் கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றி ஆட்சிக்கு வர முயற்சிப்பதாகவும்  அமைச்சர் தலத்தா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

ருவான்வெல்ல பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாளர்களை இணைக்கும் நடவடிக்கையில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்