யாழ், மானிப்பாய் பகுதியில்  பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர் கைது

யாழ், மானிப்பாய் பகுதியில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர் கைது

யாழ், மானிப்பாய் பகுதியில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2015 | 12:08 pm

யாழ்ப்பாணம் மானிப்பாய் ஆணைக்கோட்டை பகுதியில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது

குறித்த மாணவி நேற்று முன்தினம் மாலை வீ்ட்டிற்கு செல்லும் வழியில், சந்தேகபரால் முச்சக்கர வண்டியில் அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்தததை அடுத்து, சிறுமியின் ஒன்றுவிட்ட சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்