மன்னார் மனித புதைக்குழியின் அகழ்வு பணிகளை மீள ஆரம்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

மன்னார் மனித புதைக்குழியின் அகழ்வு பணிகளை மீள ஆரம்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2015 | 3:25 pm

மன்னார் மனித புதைக்குழியின் அகழ்வு பணிகளை மீள ஆரம்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏப்ரல் 6 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு மன்னார் நீதவான் அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்ட நடவடிக்கைகளை, அகழ்வு பணிகளில் முன்னெடுக்குமாறும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மனித புதைகுழி தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றதை அடுத்து, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை , பரிசோதனை முடிவுகள் மற்றும் விசாரணை அறிக்கை என்பனவற்றை விரைவில் சமர்பிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்