பண்டாரவளையில் நிலம் தாழிறங்கியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

பண்டாரவளையில் நிலம் தாழிறங்கியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

பண்டாரவளையில் நிலம் தாழிறங்கியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2015 | 11:28 am

பண்டாரவளை கலஹிட்டியாவ பகுதியில் நிலம் தாழிறங்கியமை தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது

தேசிய கட்டட ஆய்வு நிலைய அதிகாரிகள் குறித்த பகுதியில் இந்த ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

பண்டாரவளை கலஹிட்டியாவ பகுதியில் 25 அடி விட்டத்தைக் கொண்ட நிலப் பகுதி நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் தாழிறங்கியது.

இதனையடுத்து தாழிறங்கிய நிலத்தை அண்மித்த பகுதிகளில் வசித்துவந்த   12 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய அவர்கள் உறவினர்களது வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக   பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்