தேவை ஏற்படின் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஆராய உபகுழு நியமிக்க ஜனாதிபதி ஆலோசனை

தேவை ஏற்படின் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஆராய உபகுழு நியமிக்க ஜனாதிபதி ஆலோசனை

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2015 | 9:22 pm

புதிய தேர்தல் முறை தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கட்சித் தலைவர்களுக்கு இடையில்  பேச்சுவார்த்தையொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி  செயலகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

புதிய தேர்தல் முறை தொடர்பில் கட்சித் தலைவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

தினேஷ் குணவர்தன, குழுவின் அறிக்கை தொடர்பில் இதன்போது அதிக கவனம் செலுத்தியதாகவும், தேவை ஏற்படின் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஆராய உபகுழுவொன்றை நியமிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்