தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் வாக்களித்த மக்களை மறந்து விடுவதாக ஜே.ஶ்ரீறங்கா தெரிவிப்பு

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் வாக்களித்த மக்களை மறந்து விடுவதாக ஜே.ஶ்ரீறங்கா தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2015 | 8:53 pm

பெரும்பாலான அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் வாக்களித்த மக்களை மறந்து விடுவதாக பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஶ்ரீறங்கா தெரிவித்துள்ளார்.

மலையத்தில் இதனை அதிகம் காணமுடிவதாகவும், இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றுவது மக்களின் பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.

யட்டியாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

கேகாலை மாவட்டத்தில் தோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் சந்திப்பொன்று யட்டியாந்தோட்டையில் அண்மையில் நடைபெற்றது.

யட்டியாந்தோட்டை மற்றும் அதனை அண்டியுள்ள பல தோட்டங்களையும் சேர்ந்த மக்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்