கிழக்கு மாகாண சபையின் புதிய தவிசாளர் நியமனம்

கிழக்கு மாகாண சபையின் புதிய தவிசாளர் நியமனம்

கிழக்கு மாகாண சபையின் புதிய தவிசாளர் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2015 | 5:23 pm

கிழக்கு மாகாண சபையின் புதிய தவிசாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் ஏ.பீ. கலப்பதிகே சந்திரதாஸ நியிமிக்கப்பட்டுள்ளார்.

சபை உறுப்பினர்களால் புதிய தவிசாளர் ஏகமனதாக, நியமிக்கப்பட்டதாக கிழக்கு மாகாண சபையின் செயலாளர் எம்.சீ.எம். ஷெரீப் தெரிவிக்கின்றார்.

புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர், முதல் அமர்வு இன்று கிழக்கு மாகாண சபையில் இடம்பெற்றது.

முதல் அமர்வின் தற்காலிக தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் இராசையா துரைரட்ணம் செயற்பட்டதாகவும், எம்.சீ.எம்.சரீப் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண சபை மாகாண முதல்வர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் பிற்பகல் இரண்டு மணியளவில் முதல் அமர்வு கூடியதாக எமது செய்தியாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்