உலகக்கிண்ணம் 2015 – ஒரு பார்வை; முன்னிலையில் இருக்கும் சங்கக்கார

உலகக்கிண்ணம் 2015 – ஒரு பார்வை; முன்னிலையில் இருக்கும் சங்கக்கார

உலகக்கிண்ணம் 2015 – ஒரு பார்வை; முன்னிலையில் இருக்கும் சங்கக்கார

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2015 | 10:35 am

கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் இம்முறை உலகக்கிண்ண போட்டிகள் ஆரம்பித்தன.

ஆரம்பம் முதலே விறுவறுப்பாக நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு சாதனைகள்  படைக்கப்பட்டன.

அவை தொடர்பிலான பார்வை இ​தோ,

  • அதிகூடிய மொத்த ஓட்டங்களைப் பெற்றவர்கள்:
  1. சங்கக்கார – 496 ஓட்டங்கள்
  2. பிரண்டன் டெய்லர் (ஸிம்பாப்வே) – 433 ஓட்டங்கள்
  3. டி வில்லியர்ஸ் – 417 ஓட்டங்கள்
  4. டில்சான் – 395 ஓட்டங்கள்
  5. மஹ்மதுல்லா – 344 ஓட்டங்கள்
  • அதிகூடிய தனிப்பட்ட ஓட்ட எண்ணிக்கை :
  1. கிறிஸ் கெய்ல் – 215 ஓட்டங்கள்
  2. வோர்னர் – 178 ஓட்டங்கள்
  3. டி வில்லியர்ஸ் – 162 ஓட்டங்கள்(ஆ.இ)
  4. டில்சான் – 161 ஓட்டங்கள்(ஆ.இ)
  5. அம்லா – 159 ஓட்டங்கள்
  • அதிகூடிய விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் :
  1. மிச்சல் ஸ்டார்க் – 16 விக்கெட்டுக்கள்
  2. போல்ட் – 15 விக்கெட்டுக்கள்
  3. முகம்மது சமி – 15 விக்கெட்டுக்கள்
  4. டேவி (ஸ்கொட்லாந்து) – 15 விக்கெட்டுக்கள்
  5. டெய்லர் – 14 விக்கெட்டுக்கள்
  • அணிகளின் அதிகூடி ஓட்ட எண்ணிக்கை :
  1. அவுஸ்திரேலியா – 417/6 எதிர் ஆப்கானிஸ்தான்
  2. தென்னாபிரிக்கா – 411/4 எதிர் அயர்லாந்து
  3. தென்னாபிரிக்கா – 408/5 எதிர் மேற்கிந்தியத்தீவுகள்
  4. அவுஸ்திரேலியா – 376/9 எதிர் இலங்கை
  5. மேற்கிந்தியத்தீவுகள் – 372/2 எதிர் ஸிம்பாப்வே
  • அதிகூடி பவுண்டரிகளைப் பெற்ற வீரர் – சங்கக்கார (54)
  • அதிகூடி 6 ஓட்டங்களைப் பெற்ற வீரர் – டி வில்லியர்ஸ்(20)
  • அதிகூடிய சதங்களைப் பெற்ற வீரர் – சங்கக்கார (4)
  • உலகக்கிண்ண வரலாற்றில் தொடர்ச்சியாக 3 சதங்களைப் பெற்றவர் என்ற சாதனையை சங்கக்கார படைத்தார்.
  • ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்களைப் பெற்றவர் என்ற சாதனையையும் சங்கக்கார தன் வசப்படுத்தினார்.
  • உலகக்கிண்ண வரலாற்றில் ஒரு அணி பெற்ற அதி கூடிய ஓட்ட எண்ணிக்கையை பெற்ற அணி எனும் சாதனையை அவுஸ்திரேலிய அணி 417 ஓட்டங்களைப் பெற்றுப் படைத்தது. இதற்கு முன்னர் இந்த சாதனை இந்தியா வசமே காணப்பட்டது.
  • உலகக்கிண்ண வரலாற்றில் ஒரு உலகக் கிண்ணத்தில் அதிகூடிய சதங்களைப் பெற்றவர் என்ற சாதனையை சங்கக்கார தன் வசப்படுத்தினார்.
  • ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 500 ஆட்டமிழப்புக்களை செய்த முதல் வீரர் என்பதுடன், உலகக்கிண்ணத்தில் அதிக ஆட்டமிழப்புக்களை செய்திருந்த (52) அடம் கில்க்ரிஸ்ட்டின் சாதனையையும் தாண்டினார் சங்கக்கார.
  • அவு​ஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் சங்கக்காரா 2038 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.வெளிநாட்டு வீரர் ஒருவர் ​அவுஸ்திரேலியாவில்​பெற்ற மூன்றாவது அதிகூடிய ஓட்டங்கள் இவையாகும்.
  • அத்துடன் அவுஸ்திரேலியாவில் 5 சதங்களைப் பெற்றுள்ள ஒரே ஒரு வௌிநாட்டு வீரர் சங்கக்கார.
  • இலங்கை அணி சார்பான இரண்டாம் விக்கெட்டுக்கான இணைப்பாட்ட சாதனை புதுப்பிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்