இரவுநேர பஸ் சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை

இரவுநேர பஸ் சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை

இரவுநேர பஸ் சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2015 | 9:35 am

இரவுநேர பஸ் சேவைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக உள்ளக போக்குவரத்து  அமைச்சு தெரிவிக்கின்றது.

பிரதான நகரங்களில் இருந்து கிராமங்களுக்கான இரவுநேர பஸ் சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார கூறுகின்றார்.

ஏற்கனவே கொழும்பில் இருந்து அருகிலுள்ள நகரங்களுக்கான இரவுநேர பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக உள்ளக  போக்குவரத்து அமைச்சு குறிப்பிடுகின்றது.

தூர பிரதேசங்களுக்கான இரவுநேர பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், குறுகிய தூரங்களுக்கான பஸ் சேவைகள் இடம்பெறாததால்  மக்கள் அசௌகரியத்தை எதிர்நோக்கியதாக போக்குவரத்து அமைச்சர் சுட்டிக்காட்டுகின்றார்.

அடுத்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் பிரதான நகரங்களான காலி, கண்டி, குருநாகல் உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு பயணிக்கக்கூடிய, இரவு நேர பஸ் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

இந்த பஸ் சேவை இரவு 10 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் உள்ளக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்