இரத்தினபுரி பகுதியில் பஸ் மோதி 6 வயது சிறுமி உயிரிழப்பு

இரத்தினபுரி பகுதியில் பஸ் மோதி 6 வயது சிறுமி உயிரிழப்பு

இரத்தினபுரி பகுதியில் பஸ் மோதி 6 வயது சிறுமி உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2015 | 4:10 pm

இரத்தினபுரி கஹவத்தை பகுதியில் பஸ் மோதி 6 வயது பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து முற்பகல் 11.55 அளவில் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

பஸ்ஸில் மோதுண்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கஹவத்தை பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்