அத்துருகிரிய இராணுவ பாதுகாப்பு தலைமையக நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது- ரவி கருணாநாயக்க

அத்துருகிரிய இராணுவ பாதுகாப்பு தலைமையக நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது- ரவி கருணாநாயக்க

எழுத்தாளர் Staff Writer

16 Mar, 2015 | 7:38 pm

அத்துருகிரிய இராணுவ பாதுகாப்பு தலைமையகத்தின் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தில் காணப்படுகின்ற பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பு நகரிலுள்ள குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் கொழும்பு 13, சிரில் சீ பெரேரா மாவத்தையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

500 வீடுகளுடனான புதிய தொடர்மாடி வீட்டுத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்