​பொலன்னறுவை நில அதிர்வு குறித்து ஆராய கொழும்பிலிருந்து அதிகாரிகள் அனுப்பி வைப்பு

​பொலன்னறுவை நில அதிர்வு குறித்து ஆராய கொழும்பிலிருந்து அதிகாரிகள் அனுப்பி வைப்பு

​பொலன்னறுவை நில அதிர்வு குறித்து ஆராய கொழும்பிலிருந்து அதிகாரிகள் அனுப்பி வைப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2015 | 8:06 am

பொலன்னறுவை, பகமுன பகுதியில் உணரப்பட்ட நிலஅதிர்வு குறித்து ஆராய்வதற்காக, கொழும்பிலிருந்து அதிகாரிகளை அனுப்பியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஓரிரு தினங்களில் இந்த குழுவினர் மக்களை சந்தித்து நிலஅதிர்வு தொடர்பில் தகவல்களை திரட்டவுள்ளதாக பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பெர்னாட் பிரேம் குறிப்பிடுகின்றார்.

இதனையடுத்து அதிகாரிகள் குழுவினால் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

இரண்டு தசம் 9 ரிச்ட்டர் அளவிலான நில அதிர்வு, நேற்று முன்தினம் மானிகளில் பதிவாகியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

பகமுன, பொலன்னறுவை, கிரிதலே, தியபெத்கம பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்