மோடி தமிழ் மக்களின் அரசியல் தீர்விற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் – பா.அரியநேத்திரன்

மோடி தமிழ் மக்களின் அரசியல் தீர்விற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் – பா.அரியநேத்திரன்

எழுத்தாளர் Bella Dalima

13 Mar, 2015 | 7:41 pm

இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மக்களுக்கான
அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எருவில் பகுதியில் நேற்று (12) இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டார்.

ஆட்சியை மாற்றி, மைத்திரிபால சிறிசேனவை சிம்மாசனத்தில் ஏற்றி வைத்துள்ளோம், ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்ந்தும் இருந்துகொண்டுதான் உள்ளன, என்றார் பா.அரியநேத்திரன்.

அத்துடன், பாரதப் பிரதமர் வந்து வெறுமனே தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர்களை சந்தித்துச் சென்றார் என்ற செய்தியை விட, தமிழ் மக்களுக்கான அரசியல்
தீர்வுக்காக ஒரு அழுத்தத்தினை கொடுத்திருக்கின்றார் என்ற செய்தியைத் தான் தாம் வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்