முறிகள் விநியோக முறைகேடு: வேறொரு ஆய்வுக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை

முறிகள் விநியோக முறைகேடு: வேறொரு ஆய்வுக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

13 Mar, 2015 | 9:30 pm

இலங்கை மத்திய வங்கியின் முறிகள் விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழு உடனடியாக மாற்றப்பட்டு, வேறொரு குழு நியமிக்கப்பட வேண்டும் என இலங்கை வணிக சபையின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சிறந்த நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த சிலர் முயற்சிகளை மேற்கொள்வதாகவும், மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் ஜனாதிபதிக்கு கடிதமொன்றின் மூலம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது நல்லாட்சியா என சிலர் கேள்வி எழுப்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்ட நடவடிக்கைக்காக குற்றப் பத்திரிகை தயாரித்தல், உடன்படிக்கைகளை ஆராய்தல், சட்டத்தை வகுக்கின்றமையை தெளிவுபடுத்திக்கொள்ளல் என்பனவும் இந்தக் குழுவின் கடமையாக காணப்படுகின்றது.

குற்றம் மற்றும் சிவில் வழக்கிற்காக ஆஜராகின்ற சட்டத்தரணிகளின் வங்கி, நிதி நடவடிக்கைகள், பொருளாதார நிலை, மக்கள் நிதி முகாமைத்துவம், முறிகள் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் தொடர்பில் மாத்திரமன்றி, அது குறித்தும் தெளிவில்லாதுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் குழுவிற்காக வங்கிகளிலிருந்து ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், வணிக வங்கி நிதியத்தின் முகாமைத்துவம் தொடர்பிலான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிரேஷ்ட முகாமையாளர்கள், கணக்காய்வாளர்களை நியமிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்காக மேலும் 15 பில்லியன் ரூபா நிதி தேவைப்படுகின்றது என கடந்த பெப்ரவரி மாதம் நிதியமைச்சர், பெருந்தெருக்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் உயர்கல்வி அமைச்சர், திறைசேரி செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்ததாக கொள்கை அமுலாக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டிருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம நியூஸ்பெஸ்ட்டிற்கு குறிப்பிட்டார்.

பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகராக இந்தக் கூட்டத்தில் தான் கலந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.

முறிகள் விநியோகம் குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவில்லை என மலிக் சமரவிக்ரம குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், பிரதமரினால் தற்போது குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், தவறிழைக்கப்பட்டவர் என இந்த குழுவினால் அடையாளம் காணப்படும் எந்தவொரு நபருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்