பாணந்துறையில் மீட்கப்பட்ட பெண்களின் உடற்பாகங்கள் குறித்து விசாரணை

பாணந்துறையில் மீட்கப்பட்ட பெண்களின் உடற்பாகங்கள் குறித்து விசாரணை

பாணந்துறையில் மீட்கப்பட்ட பெண்களின் உடற்பாகங்கள் குறித்து விசாரணை

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2015 | 9:17 am

பாணந்துறை தெற்கு பகுதியில் இரண்டு மாடி கட்டடமொன்றில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு பெண்களின் உடற்பாகங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கிடைத்த தகவலின் பிரகாரம் சடலங்களின் பாகங்கள் மீட்கப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர கூறினார்.

இதுவொரு கொலை சம்பவமா, அல்லது வேறு அசம்பாவிதங்களா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

70 மற்றும் 72 வயதான இரண்டு வயோதிபப் பெண்களே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்