நையாண்டிக் கவிதை எழுதிய துருக்கி அழகிக்கு சிறைத் தண்டனை

நையாண்டிக் கவிதை எழுதிய துருக்கி அழகிக்கு சிறைத் தண்டனை

நையாண்டிக் கவிதை எழுதிய துருக்கி அழகிக்கு சிறைத் தண்டனை

எழுத்தாளர் Bella Dalima

13 Mar, 2015 | 4:41 pm

துருக்கி நாட்டின் முன்னாள் அழகி மெர்வே புயுக்சரக் என்பவருக்கு நையாண்டிக் கவிதை எழுதிய குற்றத்திற்காக 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் முன்னாள் அழகி மெர்வே புயுக்சரக், 2006ஆம் ஆண்டு மிஸ் துருக்கியாக தெரிவானார்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள பக்கத்தில் நையாண்டிக் கவிதை ஒன்றை வெளியிட்டார்.

இந்தக் கவிதை மூலம், துருக்கி அதிபர் எர்டோகனை களங்கப்படுத்தியதாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் இவர் மீது முறைப்பாடும் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து துருக்கி பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.

அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு நான்கரை ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Missworldturkey


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்