நிதி மோசடிகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற 12 முறைப்பாடுகள் குறித்து விசாரணை

நிதி மோசடிகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற 12 முறைப்பாடுகள் குறித்து விசாரணை

எழுத்தாளர் Bella Dalima

13 Mar, 2015 | 8:31 pm

பாரியளவிலான நிதி மோசடிகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பிரிவிற்குக் கிடைத்த 12 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகளின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் 122 மில்லியன் டொலர் நட்டம் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மின் உற்பத்தி நிலையம் 331 மில்லியன் டொலரில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அதனை 210 மில்லியனுக்கு நிர்மாணிக்க முடியுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனைத் தவிர, திவி நெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 65 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற தேசிய சம்மேளனத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்