தாமதிக்கப்படும் விசாரணைகளால் வலுவடையும் குற்றவாளிகள்: மக்கள் விடுதலை முன்னணி

தாமதிக்கப்படும் விசாரணைகளால் வலுவடையும் குற்றவாளிகள்: மக்கள் விடுதலை முன்னணி

எழுத்தாளர் Bella Dalima

13 Mar, 2015 | 6:26 pm

விசாரணைகள் தாமதிக்கப்படுவதனால் ஊழலில் ஈடுபடுபவர்கள் வலுவடைவதாக மக்கள்
விடுதலை முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த க்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாண சபை உறுப்பினர், சமந்த வித்யாரத்ன, 100 நாள் திட்டத்தில் 63 நாட்கள் கடந்துள்ள போதிலும் ஊழலில் ஈடுபட்ட ஒருவரையேனும் அரசாங்கத்தால் இனங்காண முடியாமல் போயுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, அரச ஊழியர்களுக்கும் பொலிஸாருக்கு சுயாதீனமாக செயற்படுவதற்கான வாய்ப்பு தற்போது காணப்படுகின்றது. எனினும், அரசியலமைப்பில் சுயாதீன ஆணைக்குழுவை அமைக்கும் பட்சத்தில், அவர்கள் மேலும் சுயாதீனமாக செயற்படுவதற்கு தேவையான சட்ட ரீதியான பாதுகாப்பு காணப்படும். பொலிஸாரை சேவையில் இணைப்பது, பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் ஆகியன அரசியல்வாதிகள் ஊடாகவே தற்போதும் வழங்கப்படுகின்றன. முழு பொலிஸ் சேவையும் அரசியலுக்குள் மூழ்கியுள்ளது. இதுவே இந்த நாட்டின் சட்டம் வீழ்ச்சியடைந்தமைக்கான காரணமாகும் என குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்