சீகிரிய சுவரில் கிறுக்கிய யுவதிக்கு பொது மன்னிப்பு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம் – எஸ்.யோகேஸ்வரன்

எழுத்தாளர் Bella Dalima

13 Mar, 2015 | 7:04 pm

சீகிரிய சுவரில் கிறுக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யுவதிக்கு பொதுமன்னிப்பைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – வந்தாறுமூலை, ஶ்ரீ கணேஷ வித்தியாலயத்தில் நேற்று (12) உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், சீனித்தம்பி யோகேஸ்வரன், சித்தாண்டி கிராமத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரே தண்டனை பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டதுடன் அவர் செய்த பிழைக்கு சட்டப்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அவருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் தாம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும், அந்த யுவதியை சிறையிலிருந்து மீட்பதற்கான கடப்பாடு தமக்கிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்