கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2015 | 7:51 am

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்  இலங்கை விஜத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையிட்டு வீதிகள் சிலவற்றின் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவிக்கின்றார்.

முற்பகல் 9.15 முதல் 9.45 வரையிலான அரை மணித்தியாலத்திற்கு காலி முகத்திடலுக்கு முன்பாகவுள்ள வீதியின் வாகனப் போக்குவரத்தையும் மட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் இன்று  முற்பகல் 11.30 தொடக்கம் 12.30 வரையான காலப்பகுதியில் காலி முகத்திடலிருந்து காலி வீதி ,லோட்டஸ் வீதி, செரமிக் சந்தி, ரீகல் சுற்றுவட்டம், டி.ஆர் வி​ஜேவர்தன மாவத்தை, காமினி சுற்றுவட்டம், மருதானை சந்தி, மாளிகாகந்த வீதியூடாக மகாபோதி விகாரை வரையில் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.

பிற்பகல் ஒரு மணியிலிருந்து 1.30 வரையில் மீண்டும் காலி முகத்திடலுக்கு முன்பாகவுள்ள காலி வீதி, கொள்ளுப்பிட்டி, தர்மபால மாவத்தை, லிபர்ட்டி சுற்றுவட்டம், பித்தளை சந்தி, செஞ்சிலுவை சந்தி,  நூலக சுற்றுவட்டம், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, ஹோட்டன் பிளேஸ், காசல் வீதியூடாக பத்தரமுல்லை, பொல்துவ வரையிலும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

இன்று பிற்பகல் 4.45 முதல் 5.15 வரையான காலப்பகுதியில் காலிமுகத்திடல் முன்பாகவுள்ள காலி வீதியிலும், இரவு 7.45 முதல் இரவு 8 மணி வரையிலும், இரவு 9.15 முதல் இரவு 9.40 வரையிலும் காலி முகத்திடல் முன்பாகவுள்ள காலி வீதியிலிருந்து ஜனாதிபித மாவத்தை வரையான வீதிகளில் விசேட வாகனப் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

விசேட வாகன போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதிகளில் குறிப்பிட்ட வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்றும், வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்