கல்வி அமைச்சிற்கு எதிராக முறைப்பாடு: ஆவணங்களைக் கையளித்தார் நலிந்த ஜயதிஸ்ஸ

கல்வி அமைச்சிற்கு எதிராக முறைப்பாடு: ஆவணங்களைக் கையளித்தார் நலிந்த ஜயதிஸ்ஸ

எழுத்தாளர் Bella Dalima

13 Mar, 2015 | 8:10 pm

கல்வி அமைச்சிற்கு எதிராகக் கிடைத்த முறைப்பாடுகளுடனான ஆவணங்களை, மக்கள் விடுதலை முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ, கல்வி அமைச்சின் செயலாளரிடம் இன்று கையளித்தார்.

முறைப்பாடுகளுடனான ஆவணங்களை ஒப்படைப்பதற்கு கல்வி அமைச்சுக்குள் மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் பிரவேசிப்பதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்தில், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதற்கு இடையூறு விளைவித்தனர்.

அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் மாற்றப்பட்ட போதிலும், இங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களோ அதன் கீழுள்ள உத்தியோகத்தர்களோ மாற்றப்படவில்லை என குறிப்பிட்ட நலிந்த ஜயதிஸ்ஸ, இதனைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர் கல்வி அமைச்சின் செயலாளரை சந்தித்து முறைப்பாடுகள் உள்ளிட்ட ஆவணங்களை மாகாண சபை உறுப்பினர் கையளித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்