இந்திய மீனவர் 43 பேர் விடுதலை

இந்திய மீனவர் 43 பேர் விடுதலை

எழுத்தாளர் Bella Dalima

13 Mar, 2015 | 8:00 pm

கைது செய்யப்பட்டிருந்த 43 இந்திய மீனவர்கள் திருகோணமலையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு குறித்த இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் முல்லைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 43 இந்திய மீனவர்கள் திருகோணமலை பிரதம நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை ஊடாக இந்திய கடல் எல்லைக்கு அழைத்துச் சென்று, இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்