இந்தியாவின் வலுவான பொருளாதார பங்குதாரர் இலங்கை – பாராளுமன்றத்தில் மோடி உரை

இந்தியாவின் வலுவான பொருளாதார பங்குதாரர் இலங்கை – பாராளுமன்றத்தில் மோடி உரை

இந்தியாவின் வலுவான பொருளாதார பங்குதாரர் இலங்கை – பாராளுமன்றத்தில் மோடி உரை

எழுத்தாளர் Bella Dalima

13 Mar, 2015 | 5:44 pm

அனைத்து தரப்பினரது அபிலாஷைகளை நிறைவேற்றுவதன் ஊடாகவே நாடு என்ற ரீதியில் முன்னேற்றம் காண முடியும் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அரசமுறை விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பாரதப் பிரதமர் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தியபோதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று தசாப்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த தருணம் உதயமாகியுள்ளதாக பாரதப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நீண்டகால சமூக, கலாசார, பொருளாதார தொடர்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு புத்தமதம் போதிக்கப்பட்டதையும் பாரதப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பை சிலப்பதிகாரம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்

மேலும், இந்தியாவின் வலுவான பொருளாதார பங்குதாரராக இலங்கை விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ள நரேந்திர மோடி, இந்தியா சிறந்த பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் ரயில்வே துறைக்காக 380 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன், விவசாயம், விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் துறைகளில் பாரிய ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையர்களுக்கு ‘ஒன் அரைவல் வீசா’ எனப்படும் விமான நிலையத்தில் வைத்து வீசா வழங்கும் நடைமுறையினை சித்திரைப் புத்தாண்டு முதல் அமுல்படுத்தவுள்ளதாக நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்