அத்தியாவசிய தேவையின் நிமித்தம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம்

அத்தியாவசிய தேவையின் நிமித்தம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம்

அத்தியாவசிய தேவையின் நிமித்தம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம்

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2015 | 8:41 am

அத்தியாவசிய தேவையின் நிமித்தம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 28 பேருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம் அனுராதபுரம், ஹப்புதலை, பன்னல, புளத்கோபிட்டிய, நிக்கவெரட்டிய, ஜாஎல, களனி பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும், தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கிரான்ட்பாஸ், கம்பஹா, பூகொடை, கொகரெல்ல, கண்டி, மஹியங்கனை மற்றும் வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தம்புத்தேகம, சீதாவக்கை, கிரியெல்ல, மத்திய முகாம், குருநாகல், பதவிய மற்றும் எல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ, பண்டாரகம, காலி, பேருவளை, கலகெதர மற்றும் மதவாச்சி ஆகிய பொலிஸ் நிலையங்களிலும் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்