64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது அவுஸ்திரேலியா

64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது அவுஸ்திரேலியா

64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது அவுஸ்திரேலியா

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2015 | 5:31 pm

உலக கிண்ண கிரிக்கெட் லீக் போட்டியில் அவுஸ்திரேலியாவின்  சிட்னியில் நடைபெற்ற 32–வது லீக்போட்டியில் அவுஸ்திரேலியா–இலங்கை (ஏ பிரிவு) அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கெதிரான  லீக் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 64 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

சிட்னியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 377 ஓட்டங்கள் என்ற வெற்றியலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46 தசம் 2 ஓவர்களில் 312 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வி அடைந்தது.

குமார் சங்க்கார 104 ஓட்டங்களையும் டில்ஷான் 62 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்

இதன்மூலம் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் ஒன்றில் தொடர்ச்சியாக மூன்று சதங்களைப் பெற்ற முதலாவது வீரராக குமார் சங்க்கார வராற்றில் இடம்பிடித்துள்ளார்

அத்துடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14000 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது வீரராக குமார் சங்கக்கார வராற்றில் பதிவானார்.

ஜேம்ஸ் போக்கனர் மூன்று விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன் மிச்சேல் ஜோன்சன் மற்றும் மிச்சேல் ஸ்டாக் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்