மெக்ஸ்வெல்லின் ஆபார ஆட்டத்தில் 376 ஓட்டங்களைப் பெற்றது அவுஸ்திரேலியா

மெக்ஸ்வெல்லின் ஆபார ஆட்டத்தில் 376 ஓட்டங்களைப் பெற்றது அவுஸ்திரேலியா

மெக்ஸ்வெல்லின் ஆபார ஆட்டத்தில் 376 ஓட்டங்களைப் பெற்றது அவுஸ்திரேலியா

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2015 | 1:23 pm

உலக கிண்ண கிரிக்கெட் லீக் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நாணய சுழற்ச்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அவுஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்தனர்.

அவுஸ்திரேலியாவின்  சிட்னியில் நடைபெறும் 32–வது லீக்போட்டியில் அவுஸ்திரேலியா–இலங்கை (ஏ பிரிவு) அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

மைக்கேல் கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளை தோற்கடித்து இருந்தது.பங்களாதேசுக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. நியூசிலாந்திடம் தோல்வி கண்டது.

மெத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி, முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டாலும், அடுத்த போட்டிகளில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், இங்கிலாந்து ஆகிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தியது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி கால் இறுதியை உறுதி செய்ய முடியும்.

போட்டியில் நாணய சுழற்ச்சியில் வென்ற  அவுஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிஞ்ச் 24 ஓட்டங்களையும், வார்னர் 9 ஓட்டங்களையும் பெற்று  ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் துடுப்பெடுத்தாடிய ஸ்மித் 72 ஓட்டங்களையும் க்லார்க் 68 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

மெக்ஸ்வெல், வொட்ஸன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்தினர். மெக்ஸ்வெல் 53 பந்துகளில் 102 ஓட்டங்களையும் வொட்சன் 41 பந்துகளில்  67 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இறுதியாக அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு  376 ஓட்டங்களைப் பெற்றுக் கெண்டது.  இலங்கைக்கு  377 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் மலிங்க மற்றும் திசர பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்