பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சுக்கு மாற்றம்

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சுக்கு மாற்றம்

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சுக்கு மாற்றம்

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2015 | 9:35 am

பொது நிர்வாகம், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சுக்களின் கீழ் செயற்பட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் சிலர் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேற்பார்வையின் நிமித்தம் பிரதேச செயலகங்களில் செயலாற்றியவர்களே இவ்வாறு இடமாற்றப்பட்டுள்ளதாக பொது நிர்வாக சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே தெரிவிக்கின்றார்.

சுமார் 17 ஆயிரம் பட்டதாரி உத்தியோகஸ்தர்களே இவ்வாறு இடமாற்றப்பட்டுள்ளனர்.

வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சுக்கு நியமிக்கப்பட்டுள்ள குறித்த அதிகாரிகளின் சேவையினை முழுமையாக பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொது நிர்வாக சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்