நாணய சுழற்ச்சியில் வென்றது அவுஸ்திரேலியா

நாணய சுழற்ச்சியில் வென்றது அவுஸ்திரேலியா

நாணய சுழற்ச்சியில் வென்றது அவுஸ்திரேலியா

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2015 | 11:28 am

உலக கிண்ண கிரிக்கெட் லீக் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நாணய சுழற்ச்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. அவுஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்தனர்.

அவுஸ்திரேலியாவின்  சிட்னியில் நடைபெறும் 32–வது லீக்போட்டியில் அவுஸ்திரேலியா–இலங்கை (ஏ பிரிவு) அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

மைக்கேல் கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளை தோற்கடித்து இருந்தது.பங்களாதேசுக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. நியூசிலாந்திடம் தோல்வி கண்டது.

மெத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி, முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டாலும், அடுத்த போட்டிகளில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், இங்கிலாந்து ஆகிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தியது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி கால் இறுதியை உறுதி செய்ய முடியும்.

போட்டியில் நாணய சுழற்ச்சியில் வென்ற அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாடி வருகிறது. அவுஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிஞ்ச், வார்னர் ஆட்டமிழந்தனர். பிஞ்ச் 24 ஓட்டங்களிலும், வார்னர் 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அவுஸ்திரேலியா 36 ஓவர்களுக்கு நான்கு விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களை எடுத்து விளையாடி வருகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்