திருமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

திருமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

திருமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2015 | 12:50 pm

திருகோணமலை யான் ஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

22 மற்றும் 23 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் ஹொரவபொத்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

திருகோணமலை ஹொரவபொத்தானை பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி நேற்றிரவு ஏழு ஐம்பது  அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ரொட்டவெவ பகுதியை சேர்ந்த இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஹொரவபொத்தானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்