தலை மன்னார் வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் நிறைவு

தலை மன்னார் வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் நிறைவு

தலை மன்னார் வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2015 | 9:56 am

மன்னார் மடுவில்  இருந்து தலை மன்னார் வரையான ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

இந்த ரயில் பாதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் எதிர்வரும் 14 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் விஜய அமரதுங்க தெரிவித்துள்ளார்.

மடுவிலிருந்து தலைமன்னார் வரையான ரயில் பாதை 63 கிலோமீற்றர் நீளமுள்ளது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் நிர்மாணப் பணிகளுக்காக 143 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரயில் பாதை திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் மடுவில் இருந்து தலைமன்னார் வரையும், தலைமன்னாரில் இருந்து மதவாச்சி வரையும் சில ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் உத்தேசித்துள்ளதாக  பொது முகாமையாளர் விஜய அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்