காணமற்போனோரை கண்டுபிடித்துத் தருமாறு  கோரி ​தொடரும் உண்ணாவிரத போராட்டம்

காணமற்போனோரை கண்டுபிடித்துத் தருமாறு கோரி ​தொடரும் உண்ணாவிரத போராட்டம்

காணமற்போனோரை கண்டுபிடித்துத் தருமாறு கோரி ​தொடரும் உண்ணாவிரத போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2015 | 11:54 am

காணமற்போனோரை கண்டுபிடித்துத் தருமாறு  கோரி யாழ்  நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று மூன்றாவது நாளாகவும் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காணாமல்போன தமது உறவுகள் தொடர்பில் நம்பகமான சர்வதேச விசாரணையை நடத்துமாறு கோரியும் காணாமற்போனவர்களின் உறவினர்களால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இதேவேளை, முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து,   நல்லூருக்கான நடைபவனி முள்ளிவாய்க்காலில் இருந்து ஆரம்பமாகி யாழ் நகரை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

ஈழ இளைஞர் பேரவையால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த நடைபவனி நேற்று மாலை முகமாலையை சென்றடைந்தது.

காணாமற் போனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், ஜநா அறிக்கை பிற்போடப்பட்டமையை கண்டித்தும், சொந்த இடங்களில் மக்களை மீள்குடியேற்றம் செய்யுமாறு வலியுறுத்தியும் இந்த நடைபவனி இடம்பெற்றுவருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்