இலங்கை மீனவர்களின் படகுகள் விடுவிப்பு

இலங்கை மீனவர்களின் படகுகள் விடுவிப்பு

இலங்கை மீனவர்களின் படகுகள் விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2015 | 8:50 am

பல மாதங்களாக இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்களின் ஐந்து படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டபோது கடந்த மே மற்றும் செப்டெம்பர் மாதங்களில் இந்த படகுகள் இந்திய கரையோர பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தன.

தமிழகத்தின் தூத்துக்குடி கடற்பரப்பில் இருந்து குறித்த படகுகள் நேற்று (07) விடுவிக்கப்பட்டதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த படகுகளில் இருந்து கைது செய்யப்பட்டிருந்த 16 மீனவர்கள் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்