இரத்தினபுரியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

இரத்தினபுரியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

இரத்தினபுரியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2015 | 5:40 pm

இரத்தினபுரி பெல்மதுளை பகுதியில் இடம்பெற்ற  முச்சக்கரவண்டி விபத்தில்   இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று முற்பகல் 10 மணியளவில் ரில்ஹேன – பெல்மதுளை வீதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் ஒன்றோடொன்று மோதியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

விபத்தில் காயடைந்தவர்களில் ஐவர் பெல்மதுளை வைத்தியசாலையிலும் இருவர் இரத்தினபுரி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கஹவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்