தெஹிவலை மிருக காட்சிசாலையில் யானைகள் சாகச நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பம்

தெஹிவலை மிருக காட்சிசாலையில் யானைகள் சாகச நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பம்

தெஹிவலை மிருக காட்சிசாலையில் யானைகள் சாகச நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

06 Mar, 2015 | 9:08 am

தெஹிவலை மிருக காட்சிசாலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த, யானைகள் சாகச நிகழ்ச்சிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

முதல் கட்டமாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் யானைகளின் சாகச நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளதாக, தேசிய மிருகக் காட்சிசாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர டி சில்வா குறிப்பிடுகின்றார்.

மிருகக் காட்சிசாலையில் இருந்த யானைகளுக்கு காசநோய் தொற்றியுள்ளதாக ஏற்பட்ட சந்தேகத்தினால், கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து யானை சாகச நிகழ்ச்சிகளை நிறுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

மிருகக்காட்சிசாலையிலிருந்த 8 யானைகளுக்கு காசநோய் தொற்றியிருக்கலாம் என பரிசோதனையின்போது சந்தேகம் நிலவியது.

இதனையடுத்து யானைகளுக்கு சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், டிசம்பர் மாதத்தில் குறிப்பிட்ட 8 யானைகளும் இரண்டு தடவைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் யானைகளின் உடலில் காசநோய்க் காரணிகள் இல்லையென்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, மிருகக்காட்சி சாலைகள் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்