மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களுக்கு  முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிய தடை

மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களுக்கு முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிய தடை

மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களுக்கு முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிய தடை

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2015 | 4:34 pm

மோட்டார் சைக்கிள்களில் செலுத்துனர்களுக்கு இம்மாதம் 21 ஆம் திகதியிலிருந்து முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான தலைக்கவசம் அணிந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர்களால் 127 குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.

நாட்டில் இடம்பெற்ற குற்றங்களை கருத்திற்கொண்டே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முழுமையாக தலைக்கவசம் அணிந்தவர்கள் முதற் தடவையாக குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டால் 1000 ரூபா தண்டப் பணமும்,இரண்டாவது தடவையாக குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டால் 2000 ரூபா தண்டப் பணமும், மூன்றாவது முறையாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு 3500 ரூபா தண்டப் பணமும் அறவிடப்படும்.

மூன்றாவது முறையாக குற்றவாளியாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு தண்டப் பணம் அறவிடப்படுவது மாத்திரமன்றி அவர்களின் சாரதி அனுமதிப் பத்திரமும் இரத்துச் செய்யப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்