மேல் மாகாண சபையிலிருந்து கிடைக்க வேண்டிய 300 மில்லியன் ரூபா கிடைப்பதில் தாமதம்  – கொழும்பு மாநகர சபை

மேல் மாகாண சபையிலிருந்து கிடைக்க வேண்டிய 300 மில்லியன் ரூபா கிடைப்பதில் தாமதம் – கொழும்பு மாநகர சபை

மேல் மாகாண சபையிலிருந்து கிடைக்க வேண்டிய 300 மில்லியன் ரூபா கிடைப்பதில் தாமதம் – கொழும்பு மாநகர சபை

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2015 | 12:26 pm

மேல் மாகாண சபையிலிருந்து கிடைக்க வேண்டிய 300 மில்லியன் ரூபா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவிக்கின்றது.

உறுதிப் பத்திரங்களை பதிவு செய்யும் போது அறவிடப்படுகின்ற முத்திரைப் பணமே இவ்வாறு தாமதமாகியுள்ளதாக மாநகர சபையின் பொருளாளர் கே.டி சித்ரபால தெரிவித்தார்.

இதனூடாக கிடைக்கப்பெறுகின்ற பணத்தை பிரதேசத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேயரின் கையொப்பத்துடன் மேல்மாகாண சபையின் அதிகாரிகளை தெளிவுபடுத்தும் வகையில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் நியுஸ்பெஸ்ட் வினவிய போது  வரவு செலவுத் திட்டத்தின் போது மாகாண சபைக்கு கிடைக்க வேண்டிய கடந்த வருடத்திற்காக முழுமையான நிதி இதுவரையும் கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அந்தத் தொகையில் 50 வீதமானவை இதுவரையும் கிடைத்துள்ளதாகவும் இந்தப் பணத்தை விரைவில் பெற்றுத்தருமாறு கோரி நிதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் பணம் கிடைக்கும் பட்சத்தில் அவற்றை செலுத்த முடியும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்