மியன்மாரில் அரிதான வெள்ளை யானை கண்டுபிடிப்பு

மியன்மாரில் அரிதான வெள்ளை யானை கண்டுபிடிப்பு

மியன்மாரில் அரிதான வெள்ளை யானை கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2015 | 5:30 pm

மியன்மார் நாட்டின் வன பரிபாலன அதிகாரிகள் மிக அரிதான வெள்ளை யானை ஒன்றை அதன் மியன்மார் நாட்டின் மேற்கு பகுதியில் காட்டிலிருந்து  பிடித்து வந்துள்ளனர்.

மேற்குப் பகுதியில் உள்ள அயேயார்வாடி காட்டிலிருந்து இந்த வெள்ளை யானை வெள்ளிக்கிழமையன்று பிடித்துக் கொண்டு வரப்பட்டுள்ளது.

7 வயது பெண் வெள்ளை யானையான இது மியன்மார் நாட்டின் வன பரிபாலன அதிகாரிகளால் பிடிக்கப்படும் 9 ஆவது வெள்ளை யானை என்று வனத்துறை அதிகாரி டுன் டுன் ஊ தெரிவித்துள்ளார்.

6.3 அடி உயரமுள்ள இந்த வெள்ளை யானை மிகவும் ஆக்ரோஷமானது எனவே வன ஊழியர்கள் காயமடையாமல் இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் பிடிக்கப்பட்ட 8 வெள்ளை யானைகளும்  அந்நாட்டின் மிருகக் காட்சி சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

வெள்ளை யானைகள் காட்டிலிருந்து பிடித்து வரும்போது அந்த யானைகளை அலங்கரித்து அழைத்து வருவது மியன்மர் அரசின் வழக்கம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்