பாரிய  ராஜ்ஜியங்கள்  சிறிய ராஜ்ஜியங்களை ஆக்கிரமிக்கும் விதம் மாற்றம் கண்டுள்ளது: ஜனாதிபதி

பாரிய ராஜ்ஜியங்கள் சிறிய ராஜ்ஜியங்களை ஆக்கிரமிக்கும் விதம் மாற்றம் கண்டுள்ளது: ஜனாதிபதி

பாரிய ராஜ்ஜியங்கள் சிறிய ராஜ்ஜியங்களை ஆக்கிரமிக்கும் விதம் மாற்றம் கண்டுள்ளது: ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2015 | 8:03 pm

உலகத்தில் பாரிய  ராஜ்ஜியங்கள், சிறிய ராஜ்ஜியங்களை ஆக்கிரமிக்கும் விதம் அக்காலப்பகுதியை விட இன்று மாற்றம் கண்டுள்ளதாக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வாரியபொலவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

வாரியபொல ஸ்ரீ சுமங்கல அனுநாயக்க தேரரின் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு இன்று வாரியபொல ஸ்ரீ சுமங்கல விகாரையில் இடம்பெற்றது.

200 ஆண்டுகளுக்கு முன்னர்  1815 ஆம் ஆண்டில் கண்டியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின் ஊடாக ஆங்கிலேயர்கள் எமது நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண’டனர்.

ஆங்கிலேயரின் கொடியை வீழ்த்தி , தாய் நாட்டின்  தேசிய கொடியை ஏற்றி போராட்டத்தை வாரியபொல ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் அன்று ஆரம்பித்தார்.

அன்று ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி வெற்றியுடன் நிறைவடைந்து குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்