பண்டாரவளை மற்றும் கம்பளை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

பண்டாரவளை மற்றும் கம்பளை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

பண்டாரவளை மற்றும் கம்பளை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2015 | 1:40 pm

பண்டாரவளை மற்றும் கம்பளை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர்.

பெரேடியவிலிருந்து பண்டாரவளை நோக்கிச் சென்ற தனியார் பஸ் குறுக்குடிய பகுதியில் விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

கட்டுப்பாட்டை இழந்த பஸ் அருகில் இருந்த மதிலொன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களில் நான்கு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக தியதலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து பண்டாரவளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கம்பளையில் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் மூவர் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

விபத்தை அடுத்து பஸ்சின் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்