தேசிய நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்ளவிருந்த இராணுவ வீரர் ரயிலில் மோதிப் பலி

தேசிய நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்ளவிருந்த இராணுவ வீரர் ரயிலில் மோதிப் பலி

தேசிய நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்ளவிருந்த இராணுவ வீரர் ரயிலில் மோதிப் பலி

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2015 | 12:31 pm

தேசிய நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்ளவிருந்த இராணுவ வீரர் ஒருவர் கல்கிஸ்ஸை பகுதியில் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் நேற்று மாலை 6 மணியளவில் அவர் மோதி உயிரழந்துள்ளதாக பதில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் பெரேரா தெரிவித்தார்.

இந்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இராணுவப் பொலிஸாருக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த் டி சில்வா  பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கின்ற கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் இராணுவத் தளபதி இராணுவப் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பதில் இராணுவப் பேச்சாளர் ஜயனாத் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்