சஷீந்திர ராஜபக்ஸவின் மனு நிராகரிப்பு

சஷீந்திர ராஜபக்ஸவின் மனு நிராகரிப்பு

சஷீந்திர ராஜபக்ஸவின் மனு நிராகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2015 | 12:07 pm

ஊவா மாகாண  முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக சஷீந்திர ராஜபக்ஸ தாக்கல் செய்திருந்த ரீட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

இதற்கமைய ஹரீன் பெர்னாண்டோ ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக தொடர்ந்தும் செயற்பட முடியும் என மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் விஜித் மலல்கொட மற்றும் எச்.சீ.ஜே.மடவல ஆகிய நீதிபதிகள் இன்று வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டி முதலமைச்சர் பதவிக்கு தெரிவான தம்மை ஊவா மாகாண ஆளுநர் சட்டவிரோதமாக அந்தப் பதவியில் இருந்து நீக்கியதுடன்  எதிர்க்கட்சி தலைவர் ஹரீன் பெர்னாண்டோவை முதலமைச்சர் பதவில் அமர்த்தியதாக  சஷீந்திர ராஜபக்ஸ தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்