சட்டவிரோதமாக மணல் அகழ்பவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி

சட்டவிரோதமாக மணல் அகழ்பவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி

சட்டவிரோதமாக மணல் அகழ்பவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2015 | 6:00 pm

அனுமதிப் பத்திரம் இன்றி, மணல் அகழும் நபர்கள் தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மார்ச் 15 ஆம் திகதிமுதல் அமுலுக்குவரும் வகையில், சட்டங்கள் கடுமையாக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய மாணிக்ககல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் நடவடிக்கைகள் தொடர்பில் கண்டறிவதற்காக இன்று முற்பகல் நடைபெற்ற கூட்டமொன்றில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற அனுமதியற்ற மணல் அகழ்வினால், சூழலுக்கு பாரியளவு பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்